இலங்கை மாணவரொருவர் வெளிநாட்டிலிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தோனேசியாவிலிருந்து குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என தெரிவித்து கொழும்பு ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு – பம்பலப்பிட்டி புனித பீற்றஸ் கல்லூரியில் கல்வி கற்று வரும் அகலங்க பீரிஸ் எனும் மாணவனுக்கே இவ்வாறாதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.ஆசிய விளையாட்டு விழாவிற்காக, இலங்கை நீச்சல் குழாமில் இடம்பிடித்து அந்த மாணவர் இந்தோனேசியா சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.