வெறும் 15 வயதில் பட்டப்படிப்பை முடித்து பொறியியலாளராகி இந்திய சிறுவன் உலக சாதனை……!!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 15 வயது சிறுவன், இன்ஜினியர் படிப்பு முடித்து, தற்போது, ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, பிஜு ஆபிரகாம் – தாஜி ஆபிரகாம்; அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன், தனிஷ்க் ஆபிரகாம், 15. தன், 15 வயதில், இவர், உயிரி மருத்துவம் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்து, தற்போது, பிஎச்.டி. படிப்பில் சேர்ந்து உள்ளார்.

இது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில், தனிஷ்க் ஆபிரகாமுக்கு பாராட்டுகள் குவிகின்றன.இவர், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொடாமல், அவர்களின் இதயத் துடிப்பை கண்டறியும் கருவியையும் கண்டுபிடித்து உள்ளார். மேலும், புற்று நோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரி செய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.