தமிழகம் உட்பட 3 மாநிலங்களுக்கு., நல்ல செய்தி.!! இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!!!

தென் இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் கடந்த மாதம் முதலே கனமழை பெய்துவருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளா, கர்நாடக மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி. தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பி வழிகின்றது. கடந்த வாரம் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டது. கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 33 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன.

இதுவரை, கேரளாவில் கனமழைக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. 53,500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்பட முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், அம்மாநிலத்தில் பல இடங்களில் நி்லச்சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், தென் மாநிலங்களில், படிப்படியாக மழை குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா மக்களுக்கு இது நல்ல செய்திதான். அதே சமயத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் தெரிவித்ததாவது, ”தென் மாநிலங்களில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக்கடல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வநிலைமைய எச்சரிக்கை விடுத்துள்ளது.