ஹிரோக்களுக்கு இணையாக நயன்தாரா

தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகியாக விளங்குபவர் நயன்தாரா. பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், நடிப்பில் ஹீரோக்களுக்கு நிகரான மாஸ் ரசிகர்களை கொண்டவராக இருக்கிறார். இவரது நடிப்பில் இந்த வாரம்  கோலமாவு கோகிலா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதுமட்டுமின்றி கொலையுதிர் காலம், விஸ்வாசம், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம் என செம்ம பிஸியாக இருக்கிறார். இவர் தன் சம்பளத்தை ரூ 4 கோடியாக உயர்த்திவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கிறது, இளம் ஹீரோக்களை விட இவர் சம்பளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.