சோனாக்ஷி சின்ஹா மிகவும் அழகிய பாலிவுட் நடிகைகளுள் ஒருவராவார். இவர் தற்போது சிக்கென்று காணப்படலாம்.
ஆனால் இவர் திரையுலகில் காலடியை எடுத்து வைக்கும் முன் குண்டாக, அமுல் பேபி போன்று இருந்தார். பின் தன் குண்டான தோற்றத்தில் இருந்து ஒல்லியாவதற்காக டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.
டிகை சோனாக்ஷி சின்ஹா திரையுலகில் நுழையும் முன் 90 கிலோ எடையுடன் இருந்தார். இவர் ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவார் மற்றும் உடற்பயிற்சிகளில் அதிகம் ஈடுபடமாட்டார். மேலும் இவர் தான் குண்டாக இருப்பதைக் கண்டு சற்றும் கவலைக் கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் இவர் உடல் எடையைக் குறைப்பதற்கு காரணமாக இருந்தவர் சல்மான் கான். இவர் தான் சோனாக்ஷியை ஊக்குவித்தாராம். சல்மான் கான் மட்டும் இல்லையென்றால், இவர் உடல் எடையைக் குறைக்க முயற்சித்திருக்கவே மாட்டாராம்.
சோனாக்ஷி மேற்கொண்ட டயட் திட்டம்
சோனாக்ஷியின் டயட் விதிமுறைகள்
- தினமும் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை உட்கொள்வாராம்.
- தண்ணீர் அதிகம் குடிப்பாராம்.
- மாலை 6 மணிக்கு மேல் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளமாட்டாராம்.
- உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை மிதமான அளவில் தான் சாப்பிடுவாராம்.
சோனாக்ஷி இவற்றை மனதில் கொண்டு தான் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாராம். அதேப்போல் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான உடல் கொழுப்பைக் கரைக்கும் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம்.
நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு தினமும் 2 முறை ஜிம் செல்வாராம். சோனாக்ஷி சின்ஹாவின் ஃபிட்னஸ் ட்ரெயினர் யாஷ்மின் கராச்சிவாலா என்பவராவார். இவரது உதவியுடன் தான் சோனாக்ஷி அன்றாடம் ஜிம்மில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதேவேளை, குண்டாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து சில ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டும் இல்லை பலர் அவரின் முயற்சியை பாராட்டியுள்ளனர்.