கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்ததையடுத்து அங்குள்ள மாவட்டங்கள் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அதனை அடுத்து அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் நிறம்பி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
குறித்த காணொளியில் பெண் ஒருவர் திருமணத்திற்காக வெள்ளபெருக்கு ஏற்பட்ட ஆற்றை பரிசல் மூலம் கடந்த காட்சி மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள தெங்குமரகடா என்ற பகுதியை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்ணிற்கும் கோவை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கும் வரும் திங்கள்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்பட்டதை அடுத்து ஊர் மக்களும் வனத்துறையினரும் சேர்ந்து மணப்பெண்ணையும் குடும்பத்தினரையும் பரிசலில் ஏற்றி ஆற்றின் மருபுறத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.