சன் டிவி ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

கேரள மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சன் டிவி ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.இயற்கைச் சீற்றம், பேரழிவுக் காலங்களில் மக்களின் துயர் நீக்க சன் டிவி தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. குஜராத் பூகம்பம், கார்கில் வீரர்களுக்கான நிதி, சென்னை வெள்ளம் போன்ற பாதிப்புகளின்போது சன் டிவி  பெருமளவில் நிதி உதவி அளித்தது.

இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில், தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிவாரணப் பணிகளுக்காக சன் டிவி ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான  காசோலையை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் சார்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சன் குழும தலைமை செயல் அதிகாரி சண்முகம், சன் நெட்வொர்க் பிரசிடென்ட் மகேஷ்குமார் ஆகியோர்  திருவனந்தபுரத்தில் நேற்று வழங்கினர்.