உங்கள் காதலி மேஷ ராசியைக் கொண்டவராயின் அவர் எப்போதும் வெளிப்படையாக இருப்பார். அவர்களுக்கு வினைத்திறனான சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள்.
அத்துடன் இவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனவே இவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு நேரம் கடந்து செல்வதே தெரியாது.
ரிஷப ராசிக் பெண்கள் இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களிடன் மனம் திறந்து பேச ஆரம்பித்து விட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும்.
இனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும், புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களிடம் தலைமைக் குணம் அடிக்கடி வெளிப்பட்டாலும் இவர்கள் உங்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள்.
மிதுன ராசிப் பெண்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மனநிலையை பொருத்து ஒவ்வொரு விதமாக இவர்கள் நடந்து கொள்வார்கள். இவர்களது உண்மையான முகம் மிக விரைவிலேயே வெளிப்பட்டு விடும். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். பாசமானவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புவார்கள்.
கடக ராசிப் பெண்கள் மீது யார் மிகவும் பாசமாக இருக்கிறார்களோ, அவர்களிடம் உயிரையே வைத்திருப்பார்கள்.
இவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதே சமயம் அமைதியானவர்கள், வெட்கப்படுபவர்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.
சிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தலைமைப் பண்பு இருக்கும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர்களது தோளில் சாய்ந்து அழலாம் என்ற அளவுக்கு இவர்களிடன் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
இவர்களிடன் நீங்கள் பொய் சொல்வதாக இருந்தால் சிறிய பொய்களை மட்டுமே சொல்லுங்கள். ஏனெனில் இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தவர்களின் கருத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும்.
விருச்சிக ராசிப் பெண்கள் பெருமைக்குரியவர்கள். தங்களது துணையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள்.
ஒருவர் மீது இவர்கள் காதலில் விழுந்து விட்டால், அவர்களின் சந்தோஷத்திற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலித்தால் நீங்கள் இன்ப அதிர்ச்சியில் எப்போதுமே மூழ்கி இருப்பீர்கள்.
தனுசு ராசி பெண்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இவர்கள் சற்று எளிதிலேயே காதலில் விழுந்து விடுவார்கள். தனக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்து விடுவார்கள்.
இவர்களுக்கு திறமைகள் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சுதந்திரம் தரக்கூடிய ஆண்களை தான் இவர்கள் விரும்புவார்கள்.
மகர ராசி பெண்கள் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும், இவர்கள் அனைவருடனும் நட்புடன் பழகுவார்கள். பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நீண்ட நாள் உறவில் நிலைத்திருப்பார்கள்.
கும்ப ராசி பெண்கள் தங்களது பெற்றோர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள். இவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள். மேலும் சிம்பிளாகவும் இருப்பார்கள். இவர்களது எளிமை குணத்தை கண்டு அனைவரும் இவர்களை பாராட்டுவார்கள்.
மீன ராசி பெண்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். எனவே இவர்களிடத்தில் நீங்கள் பொய் கூறுவதை தவிர்த்துக் கொள்ளவது நன்மை பயக்கும்.
இத்தனை குணங்களைக் கொண்ட பெண்களில் உங்களுக்கு பொருத்தமானவர் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..