9 வயதுச் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு…!!

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த சிறுவனை காணவில்லை என தேடி வந்த நிலையில், வீட்டிற்கு அருகில் பயன்படாத நிலையில் உள்ள ஆட்டுகொட்டிலில், குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போதும், அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகிப்பதாக, சிறயதந்தை கூறியதை அடுத்து, சம்வபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.