மருத்துவம் சேர்வதற்கான நுழைவு தேர்வை எழுத பிளஸ்2 தேர்வில் உயிரியல் பாடத்தை முதல்பாடமாக எடுக்காத மாணவர்கள் எழுத முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்திருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப் பாணையை ரத்து செய்து, உயிரியல் பாடம் எடுக்காதவர்களும் நீட் தேர்வை எழுதலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் நீட் நுழைவு தேர்வை எழுதுவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு மூலமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நீட் தேர்வு எழுத சிபிஎஸ்இ கல்வி வாரியம் மற்றும் எம்சிஐ எனப்படும் இந்தியன் மெடிக்கன் கவுன்சில் போன்றவை பல்வேறு கட்டுப்பாடு களை அறிவித்துள்ளன.
அதன்படி, நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்பு 25 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. அதுபோல 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தை முதல் பாடமாக எடுக்காத மாணவர்கள் நீட் தேர்வுக்கு அனுமதி இல்லை என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து, டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், எம்சிஐ-ன் உத்தரவை ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வில், உயிரியல் பாடத்தை முதல் பாடமாக எடுக்காத மாணவர்களும் பங்குபெற முடியும்.