மாவை சேனாதிராஜாவின் உரையை கேட்டு ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்ற உறுப்பினர்கள்! – அதிர்ச்சிப் படங்கள்

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் 16/8/18 யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன்போது நிகழ்வில் பங்கேற்றிருந்த தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆழந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்த படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உரையாற்றும்போது அவர் என்ன விடயத்தில் ஆரம்பித்து எங்கு முடிக்கிறார் என தெரியாது எனவும் அவரது உரை எவருக்கும் விளங்குவதில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவந்த நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் உறக்கத்தில் ஈடுபட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.

குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் ஊடக நிறுவன பணியாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான தயாளன் உள்ளிட்டவர்களே தலைவர் மாவை சேனாதிராஜாவையும் மறைந்த முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனையும் அவமதிக்கும் வகையில் உறக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

39348181_10156431624839799_3354667662050328576_n  மாவை சேனாதிராஜாவின் உரையை கேட்டு  ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்ற உறுப்பினர்கள்! - அதிர்ச்சிப் படங்கள் 39348181 10156431624839799 3354667662050328576 n39344143_10156431624844799_4631326538799775744_n  மாவை சேனாதிராஜாவின் உரையை கேட்டு  ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்ற உறுப்பினர்கள்! - அதிர்ச்சிப் படங்கள் 39344143 10156431624844799 4631326538799775744 n39281935_10156431624849799_4691359482834321408_n  மாவை சேனாதிராஜாவின் உரையை கேட்டு  ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்ற உறுப்பினர்கள்! - அதிர்ச்சிப் படங்கள் 39281935 10156431624849799 4691359482834321408 n39245761_10156431624944799_501119320760254464_n  மாவை சேனாதிராஜாவின் உரையை கேட்டு  ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்ற உறுப்பினர்கள்! - அதிர்ச்சிப் படங்கள் 39245761 10156431624944799 501119320760254464 n