வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம்!! எதிர்வரும் நாட்களில் வட இலங்கையின் காலநிலையில் மாற்றம்….!!

இலங்கையின் வடக்கு வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளது.குறித்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 19 ஆம் திகதி வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.இதன் நகர்வை பொறுத்து பருவமழை மீண்டும் மிக தீவிரமடையும் சூழல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி வீசும் பருவக்காற்று, வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி வேகமாக இழுக்கப்படுகிறது.இந்த காற்றின் இழுப்பு காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு நேற்றுமன்தினம் வானிலை ஆய்வு நிலையம் சிகப்பு எச்சரிக்கையை விட்டிருந்தது.கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 370 மி.மீ(37 செ.மீ) மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.