கை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு!!!

சுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

24 வயதான ஃபராஹ் அல்ஹாஜா என்ற குறித்த பெண் அன்மையில் நேர்முகப் பரீடசைக்காக  நிறுவனம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு நேர்முகத் தேர்வு செய்யும் அதிகாரியிடம் கை குலுக்காது தன்னுடைய இதயத்தின் அருகில் வைத்து இஸ்லாமிய முறைப்படி மரியாதை தெரிவித்துள்ளார்.

உடனே குறித்த அதிகாரி உங்களுக்கான தேர்வு முடிந்து விட்டது நீங்கள் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத ஃபராஹ் அவ் இடத்தை விட்டு கவலையோடு வீட்டிற்கு சென்றள்ளார்.

தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக நீதி மன்றில் வழக்கத்தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதி மன்றம் குறித்த நபரை ஃபராஹ்விற்கு 3400 பவுண்ட் நஷ்ட ஈடு வழங்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

“எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஆனால் சுவீடனில் அது மிகவும் குறைவு, நான் ஆண் மற்றும் பெண் இரு பாலாரிடமும் கை குலுக்கிக் கொள்வதில்லை, ஆனால் அவர்களுக்கு மரியாதை தருவேன்.” என்று ஃபராஹ் கூறியுள்ளார்.