-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப் படுத்துவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். பிரபலங்கள் அறிமு கமாவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
கடகம்
கடகம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களில் உண் மையானவர்களை கண்டறி வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. கடின முயற்சியால் முன்னேறும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபா ரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டி ருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
-
தனுசு
தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
மகரம்
மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். விருந்தினர் களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
-
கும்பம்
கும்பம்: உங்கள் அணுகுமுறையை மாற் றிக் கொள்வீர்கள். பிள்ளை களால் மதிப்புக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.
-
மீனம்
மீனம்: கடந்த 2 நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.