செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கிடந்த மர்மப்பொருள், பாறைத்துண்டு என கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை செய்து வரும் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் எனப்படும் ஆய்வூர்தியானது ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று எடுத்து அனுப்பிய புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மர்மப் பொருள் ஏதோ ஒன்று கிடந்தது.
செவ்வாய் கிரகத்தின் இயற்கையான பொருள் போல தோற்றமளிக்காமல், தகடு போல காட்சியளித்த அந்த பொருள் என்னவாக இருக்கும் என்ற குழப்பம் ஆராய்ச்சியாளர்களிடையே உருவானது.
மேலும், கியூரியாசிட்டி ஆய்வூர்தியில் இருந்தே ஏதேனும் ஒரு பாகம் உடைந்து விழுந்துவிட்டதா என்ற சந்தேகமும் உருவானது. ஆனால் அந்த மர்மப்பொருள், மெலிதான பாறைத்துண்டுதான் என ஆய்வுக்குப் பிறகு நாசா விளக்கம் அளித்துள்ளது.