40 வயதை அண்மிக்கின்றீர்களா..? அப்படியானால் இந்தப் பழக்கங்களை விட்டுவிடுதே நல்லது……..!

40 வயதுக்கு மேலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும்.

சில பழக்க வழக்கங்களை 40 வயது ஆவதற்குள் விட்டுவிட்டால் உடலும் மனதும் எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.செல்போனுக்கு அடிமையாகுதல்
இந்த நவீன யுகத்தில் பலரால் செல்போன் இல்லாமல் சில மணி நேரங்கள் கூட இருக்க முடியாது என்ற நிலையில், இப்படி தொடர்ந்து செல்போன் திரையை பார்ப்பதால் நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்றவைகள் ஏற்படும் என ஒரு ஆய்வு சொல்கிறது.

ஆகவே, செல்போன் பயன்பாட்டை குறைத்து கொள்வது நல்லது.தூக்கம்
18லிருந்து 64 வயதானவர்கள் தினமும் இரவு 7லிருந்து 9 மணி நேரம் வரை நிச்சயம் தூங்க வேண்டும். 40-ஐ நெருங்குபவர்களும் சரியான அளவு தூங்க வேண்டியது அவசியம்.

இல்லையென்றால் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மற்றும் உடல் பருமன், போன்ற பிரச்சனை ஏற்படும்.உணவை தவிர்ப்பது
பலர் காலை வேளை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் மதியம் அல்லது மாலை பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் சாப்பிடுவார்கள்.

இது தவறு, காலை உணவை தவிர்ப்பது மற்றும் இது போன்ற உணவுகளை சாப்பிடும் மூன்றில் இரண்டு பங்கினருக்கு 40 வயதுக்கு மேல் நீரிழிவு நோய் வரும் என ஆய்வு கூறுகிறது.

உடல் நல கோளாறு அறிகுறிகளை புறக்கணிப்பது
வயது ஏற ஏற உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாடும் பலவீனமாக வாய்ப்புகள் அதிகம்.அதனால் 40-ஐ நெருங்குபவர்கள் எந்த ஒரு சிறிய அறிகுறிகள், வலிகள் உடலில் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.சிகரெட் மற்றும் மது
40 வயதை நெருங்குபவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் நிச்சயம் விட்டு விட வேண்டும்.

இப்படி செய்வதால் இதய நோய் சர்க்கரை, நோய், நுரையீரல் நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும்.

உடற்பயிற்சி
பல வித உடல் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க உடற்பயிற்சி நமக்கு உதவுகிறது. முக்கியமாக 40 வயதுக்கு மேலான பல பெண்கள் இடுப்பு, மணிக்கட்டு, அல்லது முதுகெலும்பு வலி மற்றும் முறிவுகள் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.சரியாக உடற்பயிற்சி செய்யாததே இதற்கு காரணமாகும்.

எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
ஒருவருக்கு வயது ஏற ஏற எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். இது போன்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே 40 வயதுக்கு மேல் வரும் பல உடல் நல கோளாறுகளை தடுக்க முடியுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.