இதய அடைப்பு முற்றிலும் நீங்க வேண்டுமா? அப்போ தினமும் இதை செய்யுங்க.

மனித உடலில் இதயத்தின் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு பெருந்தமனியின் மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது.

இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது. பரபரப்பாக இயங்கும் இதயம் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த உடலும் குலைந்துவிடும்.

இத்தகைய இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பை குணப்படுத்தும் சில இயற்கை முறைகளை பற்றி பார்ப்போம்.

இதய அடைப்பை குணப்படுத்தும் முறைகள்
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
  • உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்த இதய நோய் குணமாகும்.
  • சுருங்கிய இதய வால்வுகளில் இரத்தம் எளிதாக சென்று வர வெங்காயம் பெரிதும் உதவுகின்றது. எனவே தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை எடுத்து கொண்டால் அது உடலில் உள்ள கொழுப்பை கொஞ்சம் கொஞ்சமாககரைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தும்.
  • இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்கி மீண்டும் இரத்த குழாயில் அடைப்பு வராமலும் தடுக்க தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர வேண்டும்.
  • கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வர உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
  • இதய வால்வு அடைப்பு நீங்க ஒரு டம்ளர் வடிகட்டிய எலுமிச்சை சாறு, ஒரு டம்ளர் பூண்டு சாறு, ஒரு டம்ளர் இஞ்சி சாறு, ஒரு டம்ளர் ஆப்பிள் சைடர் வினிகர் நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு இந்த கலவையை அடுப்பில் 60 நிமிடங்கள் வைத்து பின்பு அதனுடன் சம அளவில் தேனை சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் இதய அடைப்புக்கான அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.
  • இதய வால்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
  • இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. எனவே இஞ்சி சாருடன் தேன் எலுமிச்சை சாறு சர்க்கரை கலந்து தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும்.