கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் தங்களின் பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத பாரியளவிலான சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பளை பிரதேசத்தின் பல இடங்களில் சட்டவிரோத மணல் இரவு பகலாக இடம்பெற்று வருகிறது என்றும் பொலீஸாரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் பல சந்தர்ப்பங்களில் பொலீஸாரின் துணையுடன் மணல் அகழ்வு இடம்பெறுகிறது என்றும் தெரிவிக்கும் பிரதேச மக்கள் இதனை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினரே தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பளை பிரதேசத்தின் கிளாலியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வினை பொலீஸார் கட்டுப்படுத்த தவறிய நிலையில் விசேட அதிரடிப்படையினரே தற்போது பெருமளவுக்கு கட்டுப்படுத்தியிருகின்றனர் என்றும். எனவே ஏனைய பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த விசேட அதிரடிப்படையினல் நடவடிக்கை அவசியம் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு விடயத்தில் பொலீஸாரின் நடவடிக்கையில் நம்பிக்கையிழந்த தாங்கள் விசேட அதிரடிப்படையினரிடன் உதவியை நாடுவதாகவும் அவா்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தாது விடடின் குறுகிய சில வருடங்களில் பளை முழுவது உவராக மாறிவிடும் எனவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்