கேரளாவில் பெருவெள்ளம் வந்து தத்தளிப்பார்கள் என துல்லியமாக கணிக்கப்பட்ட பஞ்சாங்கம்!. சென்னையில் நடக்கவிருக்கும் நிகழ்வு என்ன?

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் பெரு வெள்ளம் ஏற்படும் என்றும், பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது. குறித்து புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜோதிடம், ஜாதகத்தில் பலருக்கும் நம்பிக்கை இருக்கும், சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனாலும் ஜோதிடத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் நிஜத்தில் பல நடந்துள்ளன. அந்த வகையில் கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என்று, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்தியாவின் மைய கடல் பகுதியில் பெருத்த நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக பெரும் புயல் உருவாகி , தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபநாட்களாக பெய்து வரும் கனமழையால், அம்மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

மேலும் அந்த பஞ்சாங்கத்தில் இந்த வருடம் தமிழகத்திலும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் என்றும், சென்னையில் பலமாக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.