மோட்டார் சைக்கிளும்- பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்குள்ளாகின. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை நீர்வேலி வடக்கு மாசிவன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் இராசவீதியூடாக நிலாவரை நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனம் மாசுவன் சந்தியை கடக்க முற்பட்ட போது, அச்செழு வீதியூடாக நீர்வேலி சந்தி நோக்கி மோட்டார் சைக்கிளில் பட்டா ரக வாகனத்துடன் மோதியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காலில் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் ஒருபகுதி பலத்த சேதமடைந்துள்ளது.அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.