பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுஜாதா குமார். இவர் பாலிவுட்டில் 24-க்கும் அதிகமான சீரியல்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் ஸ்ரீ தேவியுடன் இங்கிலிஷ் விங்கிலீஷ் மற்றும் பல படங்களிலும் நடித்து இருந்தார்.
இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் புற்று நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அவரது தங்கை சுசித்ரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அவரது டீவீட்டில் என் சகோதரி சுஜாதா குமார் நம்மை விட்டு நீங்கி விட்டார். அவர் இல்லாத இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான ஒன்று எனவும் கூறியுள்ளார்.