கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ள மஹத் அடிக்கடி கோபமடைந்து சக போட்டியாளர்களிடம் சண்டையிடுவதையே வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.
சமீபத்திய எபிசோடில் கூட மும்தாஜை மோசமாக திட்டி பேசி இருந்தார். ஆனால் கமல்ஹாசனோ அதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் மும்தாஜை அவரும் டார்கெட் செய்து பேசினார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மீண்டும் மஹத் ஜனனியிடம் இந்த பொம்பள தப்பான பொம்பள அது எனக்கு தெரியும் என மீண்டும் மும்தாஜ் பற்றி மோசமாக பேசுகிறார். இது நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.