கருணாநிதி கூறிய ரகசியம்: பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி

திமுக தலைவா் கருணாநிதி இறந்ததையடுத்து, தற்பொது திமுக  ஸ்டாலின் தலைமையில் இயங்கி வருகிறது. ஆனால், அழகிரிக்கு என்று தனி பலம் இருக்கிறது, மேலும் அதை சரியான நேரத்தில் வெளிக்காட்டுவேன் என்று அழகிரி அடிக்கடி கூறி வருகிறார்.

இந்நிலையில் தொண்டர்கள் ஸ்டாலின் பக்கம் போக நினைத்தாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களை எடுத்தக்கொண்டால் அழகிரி இல்லாமல் திமுக இயங்காது என்று தெரிய வருகிறது. கொங்கு மண்டலத்தில் இருப்பவர்களிடம் அழகிரி பற்றி கேட்டால், ‘அவரா..? மதுரை பக்கம் அவரை மீறி ஒன்னும் நடக்காதுங்களே’ என்று சொல்லி வைத்தது ஒரே மாதிரி பலரிடத்தில் இருந்து பதில் வருகிறது.

இதனையடுத்து கட்சி நடவடிக்கை, குடும்ப கருத்து வேறுபாடு இருந்தாலும், இனி வரும் காலங்களில் அதிமுகவையும், பாஜகவின் மந்திர வலையையும் தாண்டி வரவேண்டும் என்றால், திமுகவில் ஆங்கங்கே சிதறுண்டு கிடக்கும் பிரிவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் இன்னும் அதிமுகவினரை போலவே கயிறிழுக்கும் போட்டியை போல இருபக்கமும் இழுத்துக்கொண்டு, முட்டலும் மோதலுமாக முகம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டியளித்த அழகிரி தான் யார் என்பதை விரைவில் நிரூபிக்க இருப்பதாக கூறியுள்ளார். இது அதிமுகவில் பன்னீர் செல்வம் நடத்திய தர்மயுத்தம் கதையை நினைவு படுத்துவதை போலத்தான் அமைந்துள்ளது. அம்மாவின் என் மனக்குமுறலை கொட்டினேன் என்று அவர் சொன்னதை போல, ‘கருணாநிதி என்னிடம் இரகசியம் கூறியுள்ளார். அதன்படியே செயல்படுவேன் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

அது என்ன இரகசியம்..? அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கும்..? ஏன் இது போன்று பேட்டியளித்துள்ளார் என்று தெரியாமல் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.