வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்தபின்னர் கிளிநொச்சியில் இரு விகாரைகள் கட்டுவதற்கு ஆளுநர் திட்டமிட்டுள்ளார் என்ற வடக்கு மாகாண முதலமைச்சரின் கூற்றை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மறுத்துள்ளார்.
விகாரைகள் கட்டப்படவுள்ளன என்று குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு முதலமைச்சர் அவை எந்த இடத்தில் கட்டப்படவுள்ளன என்பதையும் கூற வேண்டும் என்று ஆளுநர் சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர் கிளிநொச்சியைச் சிங்கள பௌத்த மயமாக்க ஆளுநர் திட்டமிட்டுள்ளார். இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு ஆளுநர் செயலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.