மிகவும் ஆபத்தான நிலையிலும் பரீட்சை எழுதிய சிங்கள மாணவன்….!! மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு…!

களுத்துறையில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்த மாணவன், தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார்.

மத்துகம ஒவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஹவிது ஷாமிக மத்துகம என்ற மாணவன், ஆனந்த ஷாஸ்த்ரா தேசிய பாடசாலையில் கல்வி கற்று வருகிறார். குறித்த மாணவனே இவ்வாறான அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழழைமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மாணவன், களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலை மற்றும் கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளார்.எனினும், எப்படியான நிலைமையில் இருந்தாலும், பரீட்சை எழுத வேண்டும் எண்ணத்திலேயே அவர் காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய சனிக்கிழமை பரீட்சை இடம்பெற்ற மண்டபத்திற்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட மாணவன் வாகனத்தில் இருந்தவாறு பரீட்சை எழுதினார்.வாகனத்தில் இருந்து பரீட்சை எழுத அனுமதிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய பரீட்சை மண்டபத்திற்கு அருகில் காரில் அமர்ந்து ஆசிரியர்களின் கண்கானிப்பில் மாணவன் பரீட்சை எழுதியுள்ளார்.

தனது நிலைமையை புரிந்து கொண்டு இவ்வாறு பரீட்சை எழுத அனுமதித்த அனைவருக்கும் நன்றி என குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.வாகன விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த போதும், மனவலிமையில் பரீட்சை எழுதிய மாணவனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டியுள்ளனர்.

இவ்வாறான மன வலிமையுள்ள மாணவ சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.