இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடந்த கொடூர யுத்தத்தில் இறந்து போன லட்சக்கணக்கான உயிர்களை விட காயமடைந்து அவயங்களை இழந்து வாழ்வதற்காக தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம்…!அவர்களில் பெரும்பாலானோர் கால்கள் கைகளை முற்றாக இழந்து, அல்லல் படுவதை தினமும் பார்க்கின்றோம்…
அவர்களில் சிலருக்கு அரசாங்கத்தினாலும் பிற நிறுவனங்களினாலும் கிடைக்கும் வாழ்வாதார உதவிகளை விட வேறு உதவிகள் கிடையாது… தமக்கு கிடைக்கும் வாழ்வாதார உதவிகளை கொண்டு வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டியது ஒவ்வொரு பொதுமகனினதும் கடமையல்லவா?
அந்த வகையில் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் யுத்தத்தில் இருகால்களையும் இழந்த மாற்றுத் திறனாளியான இந்த இளைஞனுக்கும் கை கொடுங்கள்….
கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வசிக்கும் இருகால்களையும் யுத்தத்தில் இழந்த மாற்றுத் திறனாளி ஒருவரினால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தகப் பைகளுக்கு சந்தைவாய்ப்பு வழங்கி ஆதரவு கொடுங்கள்.
வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகள் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக பாடசாலை புத்தக பைகளை வழங்குபவர்கள் மொத்தமாக ஓடர் செய்து இவரிடம் பெற்றுகொள்ளமுடியும்.இவரின் திறமைக்கு உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்குங்கள்.
திரு.இராசேந்திரம் அவருடைய தொலைபேசி இலக்கம் 0775288768