-
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடி வெடுக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவுசுமார்தான். உத்யோகத்தில் விமர் சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.பொதுக் காரி யங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக் கும்.வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.
-
கன்னி
கன்னி: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியா பாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
-
துலாம்
துலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள்.சொத்துப் பிரச்னையில் சுமூகதீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும்.உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.
-
தனுசு
தனுசு: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு,மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.
-
மகரம்
மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பிற்பகல் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
-
கும்பம்
கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.
-
மீனம்
மீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப்பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.