யாழில் பதற்றம்! ஆவா குழுவிற்கு வாள்களை காட்டி எச்சரித்த இளைஞர்கள்?

யாழில் ஆவா குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துண்டு அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவாக் குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கைகள் சற்றுமுன்னர் விநியோகிக்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளிலில் வாளுடன் பயணித்த இளைஞர்கள் சிலர் இந்த துண்டு அறிக்கைகளை விநியோகித்துள்ளனர்.

வீதியில் பயணித்தவர்களுக்கு வாள்களைக் காட்டி பயமுறுத்தியும் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டு வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் எனக் குறிப்பிட்டு இந்தத் துண்டு அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்ந செயலில் ஈடுபட்டவர்கள் யார் என இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.