வாக்கிங் சென்ற பெண்ணை கடித்துக்கொன்ற முதலை..

அமெரிக்காவில் வாக்கிங் சென்ற பெண்ணை முதலை கடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வாக்கிங் சென்ற பெண்ணை கடித்துக்கொன்ற முதலை

கலிபோர்னியா:

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்தவர் கசான்ட்ரா கிலின் (45).

இவர் அங்குள்ள கடற்கரையில் தனது செல்ல நாயுடன் ‘வாக்கிங்’ சென்று கொண்டிருந்தார். அப்போது கடற்கரை ஓரம் 8 அடி நீள முதலை ஒன்று படுத்துக் கிடந்தது.

நாயை பார்த்ததும் அதை கொன்று சாப்பிட முயற்சித்தது. எனவே, தனது நாயை முதலையிடம் இருந்து காப்பாற்ற கசான்ட்ரா முயன்றார். உடனே நாயை விட்டுவிட்டு அவரது காலை முதலை இறுக்கமாக கவ்விக் கொண்டது.

அதனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் விடாத முதலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்று கடித்து கொன்று தின்றது.

இதற்கு முன்பு புளோரி டாவில் கடற்கரையில் ‘வாக்கிங்’ சென்ற 47 வயது நபர் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்தார். தெற்கு கலிபோர்னியாவை பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளில் முதலை தாக்கி இறந்த முதல்நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.