ஜோதிடத்தின் படி, ஒருசில ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று கூறுகிறது.
விருச்சிகம் மற்றும் கடகம்
இந்த இரு ராசிக்காரர்களும் ஒன்று சேர்ந்தால், இருவரும் எந்நேரமும் அழுது கொண்டே தான் இருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அந்த வாக்குவாதம் அனல் பறக்கும்.
ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரு ஆரோக்கியமான உறவை அமைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.
கன்னி மற்று மிதுனம்
இந்த இரு ராசிக்காரர்களுக்குமே வெவ்வேறான கருத்துகள் என்பதால், இவர்கள் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.
இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் விருப்பப்பட்டதை குறிப்பிட்ட வழியில் பெற நினைப்பார்கள்.
ஆனால் மிதுன ராசிக்காரர்களோ, அதற்கு அப்படியே எதிர்மாறானவர்களாக இருப்பார்கள்.
தனுசு மற்றும் துலாம்
இந்த இரு ராசிக்காரர்களும் சண்டைப் போடுவதை நிறுத்தவே மாட்டார்கள். உறவில் ஈடுபட்டால், அந்த உறவை எந்நேரமும் சண்டையிட்டே கழிப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் எப்படி இருவரும் சமாதானமாகி, தங்களுக்குள் இருக்கும் காதலை வளர்ப்பது என்று சற்றும் யோசிக்கவே மாட்டார்கள்.
அதனால் இவர்களது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் விதமே தனியாக இருக்கும். இதனாலேயே சண்டைகள் எப்போதும் வரும்.
மீனம் மற்றும் கும்பம்
இந்த இரண்டு ராசிக்காரர்களிடமும் உள்ள சில பொதுவான ஒற்றுமை என்றால், அவர்களது சுதந்திரம் மற்றும் படைப்பு போக்குகள் தான். மற்றபடி இவர்களது குணம் வேறு.
மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து பாசத்தையும், அன்பையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கும்ப ராசிக்காரர்களோ, சுதந்திரத்தையும், சிறிது இடைவெளியையும் எதிர்பார்ப்பார்கள்.
மகரம் மற்றும் மிதுனம்
இந்த இரு ராசிக்காரர்களின் சேர்க்கை ஒரு பேரழிவில் முடியும். இந்த இரண்டு ராசிக்காரர்களும் முற்றிலும் எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகர ராசிக்காரர்கள் எதையும் ஒழுங்காக செய்ய நினைப்பார்கள். ஆனால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைக் குறித்து எவ்வித திட்டமும் இல்லாமல் இருப்பார்கள்.
கன்னி மற்றும் மீனம்
இவ்விரு ராசிக்காரர்களுக்கும் இடையே நிறைய மோதல்கள் ஏற்படும். மீன ராசிக்காரர்களின் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்துமே நிறைவேறாமல் தான் இருக்கும்.
ஆனால் கன்னி ராசிக்காரர்களோ, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றாமல் இருக்க மாட்டார்கள். இதனாலேயே இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் ஒத்துப் போகாது.
மீனம் மற்றும் சிம்மம்
இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரே வழியில் தொடர்பு கொள்ள மாட்டார்கள் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் இருவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
மீன ராசிக்காரர்களோ மிகவும் சென்சிடிவ்வானவர்கள், அதே சமயம் சிம்ம ராசிக்காரர்கள் ஒரு விடயத்தால் ஏற்படும் பாதிப்பைப் புரிந்து கொள்ள சற்று தாமதமாகும்.
தனுசு மற்றும் ரிஷபம்
தனுசு ராசிக்காரர்கள் எப்போதுதும் பரபரப்புடன் இருப்பதுடன் எதையேனும் ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு அப்படியே எதிர்மாறாக இருப்பார்கள்.
மேஷம் மற்றும் கடகம்
இந்த இரண்டு ராசிக்கார்களும் எப்போதும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். மேஷ ராசிக்காரர்கள் வலிமையான குணம் கொண்டவர்கள் . கடக ராசிக்காரர்கள் சென்சிடிவ்வானவர்கள்.
அதனால் இவ்விரு ராசிக்காரர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான குணம் என்னவென்றால், அது அக்கறையும், காதலும் தான்.