நமது உடல் சிறப்பாக செயல்படுவதற்கு நுரையீரல் முக்கிய பங்காற்றுகிறது
அத்தகைய நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழிகள் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்தல் ஆகும்.
நுரையீரலை சிறப்பதாக செயல்பட வைக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி பார்ப்போம்.
நுரையீரலை சுத்தமாக்க உண்ண வேண்டிய உணவுகள்
- ஆப்பிளில் அதிக அளவில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோடீன் இருப்பதால் இது நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும். மேலும் ஆப்பிளில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால் அது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஒமோகா 3 ஃபேட்டி அசிட் அதிகம் உள்ளதால் இதனை அதிக அளவு சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா மற்றும் இதர சுவாச கோளாறுகளை சரி செய்யும். மேலும் இந்த ஒமோகா 3 அசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் உள்ளன.
- பூண்டு ப்ளேவேனாய்டுகளை மட்டுப்படுத்துவதால், க்ளூடாதியோன் உற்பத்தியை ஊக்குவித்து, டாக்சின் மற்றும் கார்சினோஜீன் குறைவதை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.
- உடல் செயல்பாடுகளை சிறப்பாக செயல்பட வைக்க தண்ணீர் தான் சிறந்த வழி. தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் குடிப்பதால் நுரையீரல் ஏற்படும் எரிச்சல் மற்றும் அதிக அழற்சிக்கு குணமாகும்
- ப்ளுபெர்ரியில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இவை உடலில் ஏற்படும் செல் சேதமாவதை எதிர்த்து போராட உதவும். மேலும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கவும் திறம்பட செயல்படவும் பெர்ரி உதவும்.
- ப்ரோக்கோலி இதில் வைட்டமின் சி, கரோடேனாய்டு, போலேட்மற்றும் பைடோ கெமிக்கல் அதிகமாக இருப்தால். நுரையீரலில் ஏற்படும் சேதாரத்தை தடுக்கிறது. மேலும் இதில் எல்-சல்போராஃபேன் அடங்கியுள்ளதால், சுவாசப்பிரச்சனைகளை தடுக்கும் வகையில், அழற்சியை எதிர்க்கும் ஜீன்களை ஏற்படுத்துகின்றன.
- இஞ்சி அழற்சியை எதிர்ப்பது மட்டுமில்லாமல், நுரையீரலில் இருந்து மாசூட்டிகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது. மேலும் இவை உடலில் காற்றோட்டத்தை சரிசெய்தல் மற்றும் நுரையீரலில் சுழற்சியை போன்றவற்றின் மூலம், நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
- ஆளி விதைகள் கதிர்வீச்சுக்கு முன்பு நுரையீரல் பாதுகாப்பதுடன், அதனால் ஏற்படும் சேதத்தையும் பெருமளவில் குறைக்கிறது.
- மஞ்சளில் உள்ள கர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபடவும், ஆஸ்துமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த உணவு பொருட்களை உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் சந்தோசமான நுரையீரலை பெற்றிடுங்கள்.