பாகிஸ்தானில் நிதி திரட்டியவருக்கு 10 ஆண்டு சிறை..

தலீபான் பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிய பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில்கானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

கராச்சி:

பாகிஸ்தானை சேர்ந்தவர் இஸ்மாயில்கான். இவர் அங்கு தலீபான் பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிக்கொண்டு இருந்தார். இது தொடர்பாக புகார் எழுந்தது. பயங்கரவாத தடுப்பு படையினர் இஸ்மாயில் கானை கைது செய்தனர்.

அவர் மீது கராச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். மேலும், 1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவில், இஸ்மாயில் கான் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என நீதிபதி கண்டு, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.