விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து இலங்கையில் இருந்து 2009மே 19 இல் செய்திவந்தபோது தானும், தனது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சி அடையவில்லை என கொங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜேர்மனியில் வைத்து தெரிவித்துள்ளார்
ஜேர்மன் ஹம்பர்க் நகரில் உள்ள புயுசிரியஸ் கோடைகால கல்லூரியில் (Bucerius Summer School, Hamburg)உரையாற்றிய போது அவர் இதனைத்தெரிவித்தார்.
என்னுடைய பாட்டி இந்திராகாந்தி> என் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வன்முறைக்கு இரையாகிக் கொல்லப்பட்டார்கள். நானும் வன்முறையால் பாதிக்கப்பட்டவன்தான்
என்றாலும் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 2009மே 19 திகதி செய்திவந்தபோது
இதுகுறித்து சொல்ல எனது சகோதரி பிரியங்காவை தொலைபேசியில் அழைத்தேன். அன்று எனது மனது ஒருவிதமான பதற்றத்துடன் இருந்தது. எனது தந்தையின் கொலையுடன் தொடர்புபட்ட ஒருவர் குறித்த செய்தியாக இருந்தாலும் எனது மனதில் சோகம் இருந்தது. இதேபோலவே தனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை என மனதில் சோகம் இருந்தது என எனது சகோதரி பிரியங்கா சொன்னார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்னை வைத்துப் பார்த்தேன். சோகம் வந்தது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக ஆரம்பித்தில் வன்முறை பாய்ந்தது அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதித்தது. அந்த வன்முறையால் நானும் பாதிக்கப்பட்டேன்.
ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்>வன்முறையை ஏதோ ஒரு காரணி தூண்டிவிட்டிருப்பதைக் காணலாம். இது ஏதோ சாதாரணமாக நடக்கும் செயல் அல்ல. ஒருவருக்கு எதிராக வன்முறை அல்லது ஒரு செயல் தூண்டிவிடப்பட்டுள்ளதாகவே எடுக்க வேண்டுமெனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.