இலங்கையில் அயல் வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர்..

அயல் வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ரக்குவானை காவற்துறையால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் ரக்குவானை பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் ரக்குவானை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ள சந்தர்ப்பத்தில் , சிறுமி இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் , சம்பவம் தொடர்பில் சிறுமி பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து , பெற்றோரால் காவற்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.