கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. மழையின் தாக்கம் குறைந்து, ஆங்காங்கே சூரியன் வெளிவரத் துவங்கியுள்ளது.
அதுபோல சில இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. பாதுகாப்பு முகாம்களில் பாதுகாப்பாக இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப தொடங்கியுள்ளனர்.
கேரளா வெள்ளத்தில் மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை பல ஜீவராசிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல மக்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உயிரினங்களைக் காப்பாற்றிய வீடியோகளும் வலைத்தளங்களில் பரவிவருகிறது.
அண்மையில் வெள்ளத்தில் சிக்கிய யானைக்காகக் கேரள ஆணை மூடப்பட்டது, அது போல கேரள மக்களும் பல உயிரினங்களைக் காப்பாற்ற முயற்சி செய்துகொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில், மலைகள் மற்றும் காடுப் பகுதிகளில் இருந்து பல பாம்புகள் ஊருக்குள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டது. அதில் ஒரு மலைப்பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் அடித்து வரப்பட்டது.
ஒரு ஆளையே விழுங்கும் அளவிற்கு வல்லமை கொண்ட மிகவும் நீளமான அந்த மலைப்பாம்பை ஒரு பெண்மணி திரும்பக் காட்டிற்குள் செல்லவைத்துள்ளார்.