நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரியாக நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் நடிப்பின் உச்சிக்கே சென்று பல பாராட்டுக்களை பெற்றார்.
அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.
அவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான விஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை.
அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். கேரள வெள்ளம் குறித்து ‘கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.
ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.
நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ’96’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் ’96’ திரைப்பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ’96’. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கின்றனர். ஆக்ஷன் கலந்த காமெடி படமான இதில் காளி வெங்கட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். 1996ஆம் வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அந்தமான், கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
படத்தின் பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில் ’96’ திரைப்பட ட்ரெய்லர் வெள்ளியன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர்: