மாணவர்களின் சிந்தனையால் உருவாக்கப்பட்ட புதிய மோட்டார் சைக்கிள்..! 15 பேர் பயணம் செய்யலாம்..!

மாணவர்கள் தற்போது இருக்கும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி புதிது புதிதாக தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் பகுதியில் அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் வகையில் 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.

கொளத்தூரில் அமைமத்திருக்கும் தனியார் கல்லூரியை சேர்ந்த 70 மாணவர்கள் கடந்த 8 மாதங்களாக செய்த கடுமையான முயற்சிக்கு பின்னர் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை உருவாக்க ரூ. 1½ லட்சம் செலவாகி இருக்கிறது.

ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் இடம் பிடித்து இருக்கிறது. இதை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. அதில் இதற்கான சான்றிதழ்களை அதிகாரிகள் முறைப்படி வழங்கினர்.

மக்கள் பயன்பாட்டிற்காக இந்த வாகனம் உருவாக்க படவில்லை. மாணவர்களின் சாதனைக்காகவும், தொழில் நுட்ப திறனை மேம்படுத்தவும் மட்டுமே இந்த இரு சக்கர வாகனம் உருவாக்கப்பட்டது.