ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கனா”. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன் பாட்டு பாடும்போது டீல் செய்து கொண்டு சிவகார்த்திகேயன் பாடி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
காமெடி நடிகர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கனா’. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், அருண்ராஜா காமராஜ் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் டீசர் நேற்று முன்தினம் காலை வெளியானது. அதில், டீசரின் இறுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சற்று தடித்த தோற்றத்துடன் வயதானவரைப் போல வருகிறார்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் இதற்கு முன்னதாக வயதான தோற்றத்தில் நடிக்கவில்லை ஆகையால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.