சென்னையில் சங்கிலி பறிப்பு, வாகன திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மெரினா கடற்கரையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 2 இளைஞர்கள் மற்றும் ஒரு இளம் பெண் ஆகிய மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருவதை காவல்துறையினர். அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில், அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் இருவரும் காதலர்கள் என்று கூறினார்.
அந்த இளம் பெண்ணின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் அவரை சென்னை பூந்தமல்லியில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டில் விட்டுச்சென்றுள்ளனர்.
மேலும் இருவரும்,செல்போனில் தொடர்ந்து பேசியுள்ளனர். அந்த இளம்பெண் தான் சென்னையில் இருப்பதாகவும், தன்னை வந்து அழைத்துச்செல்லும்படியும் கூறினார். இதனால் அந்த இளைஞன் தனது நண்பனுடன் சேர்ந்து அந்த பெண்னை புதுச்சேரிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.
அந்த இளைஞன் மீது சந்தேக மடைந்த போலீசார் மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் அந்த இளைஞன் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் செல்போன் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பது தெரியவந்தது.
காவல்துறையின் விசாரணையில், தன் காதலர் ஒரு திருடன் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் செய்வதறியாது திகைத்து தனது காதலை துண்டித்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இரு இளைஞர்களையும் அழைத்து விசாரணை செய்தனர்.