வாழைச்சேனைப் புணாணை, மயிலந்தன்னை – விசரோடை ஆற்றிலிருந்து முதலை கடித்த நிலையில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மயிலந்தன்னை கிராமத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பொன்னன் மாரியாயி என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
குளிப்பதற்காக விசரோடை ஆற்றுக்குச் சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த வாழைச்சேனைப் பொலிஸார் சடலத்தை ஆற்றின் மருங்கிலிருந்து மீட்டுள்ளனர்.
மூதாட்டி குளித்துக் கொண்டிருக்கும் போது அவரைக் கௌவிச் சென்றுள்ள முதலை கிட்டத்தட்ட மூதாட்டியின் உடலின் முக்கால்வாசிப் பங்கை உட்கொண்டிருப்பது சடலத்தைப் பரிசோதனை செய்ததிலிருந்து தெரிய வந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.