விஜய் பாணியில் கேரள மக்களுக்கு உதவி செய்த உலகின் முன்னணி கோடீஸ்வரர்..

கேரளாவில் கனமழையாலும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவாலும் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். மழை எப்போதோ நின்ற விட்டாலும் அந்த பாதிப்புகளில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.

இதனால் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகில் உள்ள பல மக்களும் கேரள மக்களுக்கு உதவிகரத்தினை நீட்டி வருகின்றனர். அதன்படி உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது பங்கிற்கு 6 லட்சம் அமெரிக்க டாலரை(ரூபாய் 4.20 கோடி) தந்துள்ளார்.

ஆனால் இங்கு தான் அவர் நம் தளபதியின் வழியை பின்பற்றியுள்ளார். அதாவது விஜய் தனது நிதிஉதவி 70லட்சத்தை வங்கியிலும் செலுத்தாமல், நேரடியாக சந்தித்தும் தராமல் அங்குள்ள தனது ரசிகர் மன்றத்தின் மூலம் கொடுத்தார்.

தற்போது இதே முறையில் தான் பில்கேட்ஸும், இந்த 4.20 கோடியை தனது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மூலம் அளித்துள்ளார்.