இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 937 நோயாளர்களும் கொழும்பை அண்மித்த மாவட்டமான கம்பஹாவில் 3 ஆயிரத்து 619 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில் 35.4 வீதமான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேல்மாகாணத்தில் பதிவாகியிருக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 785 ஆல் அதிகரித்துள்ளதாகவும் அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 2788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டத்திலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. மேலும் கண்டி மாவட்டத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 563 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இம்மாதத்தில் மாத்திரம் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 788 நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதுடன் சுற்றுச் சூழல் பேணப்படாமை, முறையான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமையுமே இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என அந்தப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.