இலங்கையில் வைத்தியர்களின் மோசமான செயல்!

இலங்கையில் வைத்தியர்கள் இருவர் நடுவீதியில் மோதிக்கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலைக்கு வெளியே உள்ள வீதியில் சூடான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொண்டதனை தொடர்ந்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றள்ளது.

காலி, நெலுவ வைத்தியசாலையின் வைத்தியர்கள் இவ்வாறு மோதி கொண்டுள்ளனர்.

வைத்திய கடமையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள் இந்த மோதலை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் சம்பவம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.