ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! மைத்திரி குணரட்ன விடுத்த விசேட கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலக வேண்டுமென ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணரட்ன வலியுறுத்தியுள்ளார்.

மஸ்கெலியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி மைத்திரி தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் போது அளித்த வாக்குறுதி ஒன்றான தேர்தல் முறைமை மாற்றம் குறித்த யோசனையே நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட வாக்குறுதி தோற்கடிக்கப்பட்டதாகவே கருதப்பட வேண்டும். விருப்பு வாக்கு அடிப்படையில் தேர்தலை நடத்துவதனால் நாட்டில் மீளவும் ஊழல் மோசடிகள் இடம்பெறக் கூடிய சாத்தியமுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவியில் இருக்கும் வரையில் நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.