15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிளை வடிவமைத்த இந்திய மாணவன்….!!

கொளத்தூரில் 70 மாணவர்களின் முயற்சியால்  உருவாக்கப்பட்ட 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 70 மாணவர்களின் முயற்சியினால் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.மக்கள் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படவில்லை எனவும், மாணவர்களின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்தவும், சாதனைக்காகவும் மாத்திரமே இது வடிவமைக்கபட்டது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

உலகத்திலேயே மிக நீளமான சுமார் 6.8 மீட்டர் நீளம் 1.2 மீட்டர் அகலம் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் ட்டூவீல் டிரைவ் தன்மை கொண்டது. 12 குதிரை திறன் கொண்ட பெட்ரோல் என்ஜீன், 2 குதிரை திறன் கொண்ட எலக்ட்ரிகல் என்ஜீன் மற்றும் 1500 வோட்ஸ் சிலிக்கான் செல் பேட்டரி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தினை கின்னஸ் சாதனையில் இடம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்“ என கூறியுள்ளார்.