மறைந்த முன்னாள் முதல்வர் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, கலைத்துறையினர் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டத்தில், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் பார்த்திபன் மஞ்சள் நிற சால்வையை அணிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, கலைத்துறையினர் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டம், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தனர்.
இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சிவக்குமார், நாசர், சத்யராஜ், மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், ராதாரவி, பிரபு, ராதாரவி, பார்த்திபன், மயில்சாமி, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கருணாநிதியுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசிக்கொண்டிருக்கும்போது, “நான் ஸ்டாலினுக்கு இங்கு மரியாதை செய்ய விரும்புகிறேன்.
அது மிகப்பெரிய டானிக்காக இருக்கும்” என்று கூறி ஸ்டாலினை மேடைக்கு அழைத்தார். பின்னர், அவர் மேடைக்கு வந்ததும், தான் சர்ப்ரைஸாக கொண்டு வந்த மஞ்சள் நிறத்துண்டை (கருணாநிதி அணிந்திருப்பதைப் போல), மேடையில் வைத்து ஸ்டாலினுக்கு போர்த்தினார் பார்த்திபன்.
இது, அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகள், கலைத்துறையினர், தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.