புதிய கட்சி…. மனம் திறக்கும் அழகிரி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுக விவசாய செயலாளர் கே.பி.ராமலிங்கம் வீட்டில் திருமணவிழா நேற்று நடைபெற்றது. இத் திருமண விழாவில் திமுகவின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கலந்து கொண்டார்.

அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் திமுக தொடர்பாக அழகிரியிடம் கேள்வி எழுப்பியபோது, திமுகவில் நான் இல்லை. எனவே என்னிடம் திமுக குறித்து என்னிடம் எதும் கேட்கவேண்டாம் எனத் தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 5ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதிப் பேரணியின் போது எனது பலம் என்ன என்பது தெரியும் எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், சென்னையில் நடைபெறவுள்ள பேரணியின் போது ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பார்கள். அவர்களுடன் கலந்து பேசி புதியகட்சி ஆரம்பிப்பது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.