அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், தனது 16 மாதமே ஆன கைக்குழந்தையை சரசரவென கழுத்தை அறுத்துள்ளார். பிறகு குழந்தையின் உடலெங்கும் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். குழந்தையின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் பார்க்க கையில் துப்பாக்கியுடன் ஓடிவந்துள்ள்ளார். அப்போது குழந்தையை, தகப்பனே துடிக்க துடிக்க கொன்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை மேலும் கத்தியால் குத்தாமல் இருக்க, பக்கத்து வீட்டுக்காரர் தன் துப்பாக்கியால் அந்த தந்தையின் காலில் சுட்டார். உடனே கத்தியுடன் அவர் கீழே மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு சென்றனர். ஆனால் தந்தை கத்தியால் குத்தும்போதே குழந்தை இறந்துவிட்டிருக்கிறது.
தந்தையே குழந்தையை கொல்வதை பற்றி பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும்போது, கொலையாளி ‘இயேசு வருகிறார்’, இயேசு வருகிறார் என்று சத்தமாகக் கத்திக் கொண்டே கத்தியால் குத்தியதாக கூறுகிறார். காலில் சுட்டதற்காக போலீசார் பக்கத்து வீட்டுக்காரர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. கடைசியில் அந்த வினோத தகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.