சென்னை வாசிகளுக்கு சுமையாக போகும் அறிவிப்பு! விரைவில் வருகிறது!

தமிழ்நாட்டில் இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி 20-ந் தேதி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.குளிர் சாதன பேருந்துகளில் குறைந்த பட்சமாக ரூ.25 ஆகவும், அதிகபட்சம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டது.

பேருந்து கட்டண உயர்வால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமானம் அதிகரிக்கவில்லை. கட்டண உயர்வுக்கு முன்பு சென்னை மாநகர பேருந்துகளில் சுமார் 60 லட்சம் பேர் வரை பயணம் செய்து வந்தனர். கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பேருந்துகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியாக 40 லட்சமாக குறைந்தது.

வருமானத்தை பேருக்கும் நோக்கில் அரசு பேருந்துகள் விரைவுபேருந்துகளாக இயக்கப்பட்டதால் பயணிகள் மாநகர பேருந்துகளை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோ போன்ற மாற்று போக்கவரத்துக்கு மாறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அரசு மாநகர பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக சீசன் டிக்கெட்டில் மாற்றம் கொண்டு வர உள்ளது. சென்னையில் வேலைக்கு செல்வோர் பெரும்பாலும் மாநகர பேருந்துகளில் மாதாந்திர சீசன் பாஸ் எடுத்து பயணம் செல்வார்கள்.

பேருந்து கட்டண உயர்வால் அதிக அளவில் மாதாந்திர பாசில் பயணம் செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது 21.5 லட்சம் பேர் மாதாந்திர பாசில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தினமும் வசூலாகும் வருவாயில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது என்றும் இன்னும் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படும் என்று உறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாதாந்திர பாஸ் வைத்துள்ளனர் இவர்கள் 1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாசை பயன்படுத்தி இருந்தனர். இப்போது இவர்களுக்கும் கூடுதல் சுமையாக கூடியுள்ளது.