ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட பிரதமர் தொடர்பில் வெளியான தகவல்!

அவுஸ்திரேலிய பெடரல் லிபரல் கட்சியின் தலைவராகும் Peter Duttonனின் முயற்சி தோல்வியடைந்திருப்பது குறித்து தமிழ் அகதிகள் சபை நிம்மதியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் அவுஸ்திரேலியா பிரதமர் Scott Morrison தலைமையிலான கூட்டணி, அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு மட்டுமே மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tony Abbott கூட்டணி அரசாங்கத்தில் குடியேற்ற அமைச்சராக செயற்பட்ட மொரிஸன், அகதிகளின் படகு அவுஸ்திரேலிய எல்லையை அடையும் முன்னர் இராணுவ பாதுகாப்பு நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது உட்பட, அகதி அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அவுஸ்திரேலியாவில் வாழும் அகதிகளுக்கு தற்காலிக பாதுகாப்பு விசாக்களை இரத்து செய்து, நிரந்தர மீள்குடியேற்றத்தை மறுத்து, நவ்ரு மற்றும் மானுஸ் தீவுகளில் அகதிகளை தடுத்து வைப்பதற்கான சட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார்.

சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச சட்டங்களை மீறியமை தொடர்பில், உலகளாவிய கண்டனத்தை அந்த சட்டங்கள் பெற்றது. அது கொடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி அன்று தமிழ் அகதியான லியோ சீமான்பிள்ளை அகதி அந்தஸ்துக்காக காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

லியோவின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரின் பெற்றோருக்கு விசா வழங்குவதனையும் மொரிஸன் நிராகரித்துள்ளார்.

தமிழர்கள் தமது உயிர்களைப் பற்றி அச்சம் கொண்ட போதிலும், 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலில் 157 தமிழ் அகதிகளை தடுத்துவைத்து அடக்குமுறையாளர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியை மொரிஸன் மேற்பார்வை செய்தார்.

சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை மேற்கொண்டதனை தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்களை மூடிமறைக்க அவர் இலங்கைக்கு உதவியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை Morrison மற்றும் அவரது திணைக்களம் நிராகரித்தது.

Morrison இலங்கை அரசாங்கத்துடன் ஒரு நெருக்கமான உறவை பேணுவதற்கு உதவியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு, அவர் முதல் முறையாக கோத்தபாய ராஜபக்சவை Canberraவிற்கு வரவேற்றார். Morrison தமிழ் மக்களின் நண்பர் இல்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிஸன் நேற்று தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.